விஜய் டிவியில், அது இது எது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி கொண்டிருந்தவர் சிவகார்த்திகேயன். ஆனால், இன்று தமிழ் சினிமாவில், முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் பட நிறுவனம் தயாரிக்கும் எஸ்கே 21 படத்தில், நடித்துக்கொண்டு இருக்கிறார். ராஜ்குமார் பெரியசாமி டைரக்ஷனில், சிவாவுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிக்கிறார்.வருத்தப்படாத வாலிபர் சங்கம், டாக்டர், ரஜினி முருகன், ரெமோ, காக்கிச் சட்டை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, மனம் கொத்தி பறவை, மான் கராத்தே போன்ற வெற்றிப்படங்களை தந்த நிலையில் சீமராஜா, ஹீரோ, பிரின்ஸ், டான், மிஸ்டர் லோக்கல் போன்ற படங்கள் ரசிகர்களுக்கும் பலத்த ஏமாற்றத்தை தந்தது. எனினும் சில மாதங்களுக்கு முன் வெளிவந்த மாவீரன் படம், சிவகார்த்திகேயனுக்கு பெரிய வெற்றியை தந்தது.இந்த படத்தை தொடர்ந்து, இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க ரூ. 45 கோடி வரை சிவகார்த்திகேயன் சம்பளத்தை உயர்த்தி கேட்டதாகவும், தகவல் பரவியது. இதனால், ஏஆர் முருகதாஸ் படத்தில் சிவா நடிப்பாரா என்ற கேள்வி எழுந்தது. இதற்கு பதில் தரும் வகையில், இயக்குநர் ஏஆர் முருகதாஸ் இன்று பிறந்தநாள் கொண்டாடி வருகிறார். அவரை நேரில் சந்தித்த சிவகார்த்திகேயன் பூங்கொத்து கொடுத்து, பிறந்த நாள் வாழ்த்துகளுடன், அவரது படத்தில் நடிக்கவும் சம்மதம் கூறியிருக்கிறார்.