தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சினேகா. தனது சிரிப்பின் மூலம் புன்னகை அரசியாக ரசிகர்களின் மனதை கவர்ந்தவர். தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் இவர் நடித்துள்ளார். இவர் தமிழில் வெளிவந்த என்னவளே என்னும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய், அஜித், தனுஷ் மற்றும் சூர்யா உள்ளிட்ட பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

இதரிடையே சினிமாவில் பிரபலமான நடிகரான பிரசன்னா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. திருமணத்திற்குப் பிறகு படங்களின் நடிப்பதை சினேகா தவிர்த்து விட்டு தற்போது முழுக்க தனது குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தி வருகிறார். தமிழில் மட்டுமல்லாமல் மற்ற மொழிகளிலும் குணசித்திர வேடங்களில் தற்போது கவனம் செலுத்தி வருகிறார்.

மீண்டும் பழைய தனது உடலை பெற்றுள்ள இவர் அவ்வபோது போட்டோ சூட் நடத்தி அதனை இணையத்தில் பகிர்ந்து வருகிறார். அவ்வகையில் தற்போது சினேகா சுடிதாரில் வெளியேற்றுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
