“குஷ்புவின் மறுமுகம் இதுதான்”…. வீட்டில் அம்மாவுடன் வெளியிட்ட அழகிய புகைப்படம்…. நெகிழ்ந்து போன ரசிகர்கள்….!!!!

தமிழ் சினிமாவில் 90-களில் கொடி கட்டி பறந்தவர் நடிகை குஷ்பூ. இவரின் படங்கள் அனைத்துமே எப்போதும் ஹிட் கொடுக்கும். தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம்,கன்னடம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார். இவருக்கும் இயக்குனர் சுந்தர் சி அவர்களுக்கும் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுக்கு தற்போது இருபது வயதில் இரண்டு மகள்கள் உள்ளன. சினிமா வாய்ப்புகள் குறைந்த காரணத்தால் அரசியலில் களமிறங்கினார் குஷ்பு. பின்னர் சமீபத்தில் வெளியான அண்ணாத்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இந்நிலையில் நடிகை குஷ்பூ தனது உடம்பை குறைத்து ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு ஸ்லிம்மாக மாறியுள்ளார்.

தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தில் குஷ்பூ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் வருகின்ற பொங்கலுக்கு வெளியாக உள்ளது.இந்நிலையில் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் குஷ்பூ அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது வழக்கம். அவ்வகையில் குஷ்பூ தனது பெற்றோர் பக்கத்தில் தனது அம்மாவுடன் லேட்டஸ்ட் ஆக எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.