அட.. நம்ம குக் வித் கோமாளி புகழ் பவித்ராவா இது?…. இவருக்கு இப்படி ஒரு நிலையா?…. பார்த்ததும் ஷாக்கான ரசிகர்கள்….!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மிகப் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றுதான் குக் வித் கோமாளி. இதில் குக்குகள் செய்து அசத்தும் சமையல் மட்டுமல்லாமல் கோமாளிகள் செய்யும் காமெடிகளும் இடம்பெற்று இருக்கும். கோமாளிகள் அரங்கையே சிரிக்க வைத்துக் கொண்டிருப்பார்கள். அதன் மூலமாக தமிழகத்தில் பெரும்பாலான மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த நிகழ்ச்சி தான் இது.

இதனை காண்பதற்கே தனி ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது. தற்போது வரை இதில் மூன்று சீசன்கள் முடிவடைந்துள்ளன. அதில் இரண்டாவது சீசனை மக்களால் மறந்திருக்கவே முடியாது. ஏனென்றால் அதில் அஸ்வின், சிவாங்கி,புகழ் மற்றும் பாலா உள்ளிட்டோர் செய்த அட்டகாசங்கள் என்றும் மக்களின் மனதில் அப்படியே இருக்கும். அந்த அளவிற்கு நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தினர்.

அப்படி அந்த நிகழ்ச்சியில் இடம்பெற்றவர் தான் குக் வித் கோமாளி புகழ் பவித்ரா. இவர் கடந்த சில ஆண்டுகளாக யூடியூப் தளத்தில் வெளியாகும் பாடல்களில் நடனமாடி நடித்தும் வந்தார். கொக்கு வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவருக்கு சில பட வாய்ப்புகளும் கிடைத்துள்ளன.

சினிமாவில் ஆரம்பமே நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் தன்னுடைய ரசிகர்களை ஈர்ப்பதற்கு கவர்ச்சி புகைப்படங்களை இவர் வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் இவர் ஒரு புகைப்படம் வெளியிட்டுள்ளார். அதில் உடல் எடை குறைத்து மிகவும் மெலிந்த நிலையில் காணப்பட்ட இவரை பார்த்த ரசிகர்கள் என்ன செய்தீர்கள் என்று கேட்டு வந்தனர்.

அதற்கு பவித்ரா யாரும் என்னை போல் செய்ய வேண்டாம் என்றும் நான் உடல் எடையை குறைக்க எதுவும் செய்யவில்லை, சரியான தூக்கம் மற்றும் சாப்பாடு என எதுவும் இல்லாமல் வெளியிலேயே இருந்ததால் இப்படி ஆனேன் என விளக்கம் கொடுத்துள்ளார். அந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.