தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தளபதி என்று அனைவராலும் அறியப்படும் விஜய். இவர் அண்மையில் நடித்த பீஸ்ட் திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் ஹிட் கொடுக்கவில்லை. இதனைத் தொடர்ந்து வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தில் விஜய் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கின்றார்.

இந்தத் திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளதாக பட குழுவினர் தெரிவித்துள்ளனர். இப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஏற்கனவே கூறியுள்ளார்.

இதனிடையே விஜய் நடித்த பெரும்பாலான படங்கள் ரசிகர்கள் மத்தியில் ஹிட் கொடுத்தாலும் ஒரு சில படங்கள் தோல்வியை தழுவியுள்ளன.அப்படி விஜய் நடிப்பில் உருவாகி மாபெரும் எதிர்பார்ப்பில் இருந்து படு தோல்வியை சந்தித்த திரைப்படங்களில் ஒன்றுதான் புலி. சிம்பு தேவன் இயக்கத்தில் விஜய், ஸ்ரீதேவி, சுருதிஹாசன் மற்றும் ஹன்சிகா நடிப்பில் வெளியான திரைப்படம் தான் புலி.

ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஈடு கொடுக்காததால் படத்திற்கு சாதகமான விமர்சனங்கள் எதுவும் வரவில்லை. இந்நிலையில் இப்படத்தின் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.அதாவது விஜயின் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்த புலி திரைப்படம் சுமார் 85 கோடி வரை வசூல் செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் படுதோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.
