தமிழ் சினிமாவில் இன்றளவும் இளைஞர்களின் கனவு கன்னியாக வளம் வருபவர் நயன்தாரா. சினிமாவில் கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேல் இருக்கும் நயன்தாரா தனது அழகால் ரசிகர்களை வெகுவாக சொக்க வைத்துள்ளார். தற்போது ஒரு படத்திற்கு சுமார் 10 கோடி ரூபாய் வரை சம்பளம் பெற்று வருகிறார். தற்போது ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்தில் நயன்தாரா நடித்து வருகிறார்.

இதனிடையே கடந்த ஜூன் மாதம் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் மகாபலிபுரத்தில் உள்ள தனியார் ரிசார்ட் ஒன்றில் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்த கையோடு தாய்லாந்து ஹனிமூன் சென்ற இவர்கள் அங்கு எடுத்துக் கொண்ட பல்வேறு புகைப்படங்களையும் இணையத்தில் ஷேர் செய்தனர்.

அதன் பிறகு அவரவர் வேலைகளில் பிஸியாக இருந்து வந்த இவர்கள் கடந்த வாரம் ஸ்பெயின் நாட்டிற்கு இரண்டாவது ஹனிமூனுக்காக சென்றுள்ளனர். அங்கு இருவரும் ஒன்றாக இணைந்து ரொமாண்டிக் முறையில் எடுத்துக்கொண்டால் பல புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வாய் அடைக்க வைத்துள்ளது.

இதனிடையே நயன்தாரா பொதுவாக டாட்டூ குத்திக் கொள்வதை மிகவும் விரும்பி செய்வார் என்று பலருக்கும் தெரியும். அவ்வகையில் தற்போது தனது பின் கழுத்தில் ஒரு புதிய டாட்டூ குத்தியுள்ளார்.அந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் அவரது ரசிகர்கள் அதனை அதிக அளவு ஷேர் செய்து வருகிறார்கள்.
