தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் தான் நடிகர் வினித். கேரளாவில் பிறந்த இவர் சிறுவயதிலிருந்தே பரதநாட்டியத்தில் கை தேர்ந்தவர் ஆக வளர்ந்து வந்தார்.பல இளைஞர் விழாவில் கலந்து கொண்டு நாட்டியம் ஆடி விருதை பெற்றுள்ளார்.சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான சந்திரமுகி திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த வினித் அதில் மிக அருமையாக பரதநாட்டியம் ஆடி இருப்பார்.

கடந்த 1984 ஆம் ஆண்டு இடநிலங்கள் என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் தமிழில் 1992 ஆம் ஆண்டு ஆவாரம் பூ என்ற படத்தில் நடித்ததன் மூலம் சிறந்த நடிகர் என்ற விருதை பெற்றார். அதனைத் தொடர்ந்து ஜென்டில்மேன், மே மாதம், காதல் தேசம் மற்றும் பிரியமான தோழி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தார் .

இவர் நடிகராக மட்டுமல்லாமல் 100க்கும் மேற்பட்ட படங்களுக்கு டான்ஸ் கோரியோகிராபராக இருந்துள்ளார்.இப்படி சினிமாவில் பிஸியாக இருந்த வினித் கடந்த 2004 ஆம் ஆண்டு பிரிசில்லா மோகன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அவந்தி என்ற ஒரு பெண் குழந்தை உள்ளது.இந்நிலையில் வினைத்தேன் மகள் மற்றும் மனைவியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
