“என்ன ரொம்ப ஓவரா போற, நீயா சோறு போடுற”…. அசல் கோளாறை வெளுத்து வாங்கிய பிக்பாஸ் தனலட்சுமி…. வைரல் வீடியோ….!!!!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இதில் இதுவரை ஐந்து சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி மிக பிரம்மாண்டமாக தொடங்கியது. இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிலையில் 9 ஆண் போட்டியாளர்கள்,10 பெண் போட்டியாளர்கள் மற்றும் ஒரு திருநங்கை என 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் நுழைந்துள்ளனர்.

 

அதேசமயம் கடந்த வாரம் புதிய போட்டியாளராக மைனா நந்தினி பிக் பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்தார். முதல் நாளில் இருந்தே பிக் பாஸ் நிகழ்ச்சி மிக விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் நிலையில் போட்டியாளர்களுக்கு இடையே நாளுக்கு நாள் மோதல் போக்கு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.இன்னும் சொல்லப் போனால் நாற்பதாவது நாளில் நடக்க வேண்டியது எல்லாம் இப்போதே நடக்கிறது என கமல்ஹாசன் கடந்த வாரம் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

இந்நிலையில் போட்டியாளரான அசல் கோளாறு சக பெண் போட்டியாளர்களிடம் தவறான முறையில் நடந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் நிலையில் இவரை கண்ட்ரோல் செய்யுங்கள் இல்லை யாராவது கண்டீர்கள் என நிகழ்ச்சியை பார்க்கும் ரசிகர்கள் அனைவரும் வெறுப்பை கொட்டி வருகிறார்கள். இந்நிலையில் தனலட்சுமி இடம் அசல் கோளாறு ஏதோ ஒன்றை கூறுகிறார்.

அதற்கு கடுமையாக கோபப்பட்ட தனலட்சுமி நீ எல்லாம் சொல்லவே கூடாது என்றும் ஆண்டின்ரா, பெரிம்மான்ரா நீ சோறு போடுறியா, என்னை ஏன் எல்லோரும் அடக்கிறீர்கள்.அவனைக் கேளுங்கள் என்று கண்டபடி திட்டியுள்ள ப்ரொமோ வீடியோ தற்போது வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது.அதேசமயம் தனலட்சுமி இடம் அவர் எந்த முறையில் டார்ச்சர் செய்திருந்தால் இப்படி கோபப்பட்டு இருப்பார் என ரசிகர்கள் திட்டியும் வருகிறார்கள்.