தனுஷ் இல்லாமல் ரஜினி குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடிய ஐஸ்வர்யா…. இணையத்தின் வைரலாகும் குடும்ப புகைப்படம்….!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளம் வருபவர் தனுஷ். இவரின் நடிப்பில் அண்மையில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் சாதனை படைத்துள்ளது. சினிமாவில் கலக்கி வரும் தனுஷ் நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து பெற்றோர் சம்பந்தத்துடன் கடந்த 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இருவரும் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வந்த நிலையில் யாத்ரா மற்றும் லிங்கா என்று இரண்டு மகன்கள் உள்ளனர். இதனிடையே சமீபத்தில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தம்பதியினர் இருவரும் விவாகரத்து செய்யப் போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டனர். இந்தச் செய்தியை ரசிகர்கள் மத்தியில் பெயர் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.

இருந்தாலும் மகன்கள் இருவருமே தனது பெற்றோர்களிடம் அன்பு செலுத்தி வருகிறார்கள். அவ்வப்போது தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவுடன் தனித்தனியாக இரண்டு மகன்களும் வெளியில் செல்லும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதனிடையே தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஜோடி மீண்டும் இணைய போவதாக அண்மைக்காலமாக பல செய்திகள் இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கிறன.இருந்தாலும் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தரப்பிலிருந்து இதுவரை எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

இந்நிலையில் நேற்று தீபாவளியை முன்னிட்டு தனது மகன்களுடன் இணைந்து தீபாவளி கொண்டாடினார் ஐஸ்வர்யா. அந்த கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. அதில் ரஜினி குடும்பத்தினருடன் தனுஷின் மகன்கள் இருவரும் இடம் பெற்றுள்ளன. ஆனால் தனுஷ் மட்டும் அதில் இல்லை. அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.