சேகுவாரா கெட்டப்பில் சிம்பு வை பார்த்து அசந்து போன ரசிகர்கள்; வைரலாகுது புகைப்படங்கள்

இன்றைய இளம் நடிகர்களில், மிக முக்கியமான முன்னணி நடிகராக இருப்பவர் சிம்பு என அழைக்கப்படும் எஸ்டிஆர் சிலம்பரசன். இவரது தந்தை டி. ராஜேந்தர் திரையுலக அஷ்டவதானி என்று அழைக்கப்பட்டவர். லிட்டில் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன், சிறுவனாக டி ராஜேந்தர் இயக்கிய படங்களில் நடித்தார் சிம்பு. அதன்பின், சொன்னால் தான் காதலா என்ற பாடல் காட்சியில், வாலிபராக திரையில் சிம்பு தோன்றினார்.சிம்பு தொடர்ந்து பல வெற்றி படங்களை தந்து வருகிறார். கோவில், மன்மதன், வல்லவன், மாநாடு, பத்து தல, செக்கச் சிவந்தது வானம், வெந்து தணிந்தது காடு, சரவணா, ஈஸ்வரன் போன்ற பல படங்களில் சிலம்பரசன் நடிப்பு சிறப்பாக இருந்தது. சிலம்பரசனை பொருத்த வரை அடிக்கடி காதல் விவகாரங்களில், சர்ச்சைகளில் சிக்கி கொள்கிறார். இந்த பிரச்னைகளால், நடிப்பதில் இடைவெளிகள் ஏற்பட்டது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக நடிப்பில் முழு ஆர்வத்துடன் தீவிரமாக இருந்து வருகிறார்.சிலம்பரசன் இப்போது, ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கும் எஸ்டிஆர் 48 என்ற படத்தில் நடித்து வருகிறார். வரலாற்று பின்னணியை கொண்ட இந்த கதையில், தலையில் நீண்ட முடியுடன் சிம்பு நடிக்கிறார். அவ்வப்போது இந்த படத்தின் ஸ்டில்கள் வெளிவந்து வைரலாகி வருகின்றன.இப்போது, சேகுவாரா கெட்டப்பில் தாடி, மீசை, தலைமுடியுடன் கண்களில் கூலிங்கிளாஸ், தலையில் தொப்பி அணிந்தபடி இருக்கும் சிம்புவின் புகைப்படங்களை பார்த்து, ரசிகர்கள் ஆச்சரியப்படுகின்றனர். வழக்கமாக, கவர்ச்சியான நடிகைகளின் புகைப்படங்கள் தான் வைரலாகும். இப்போது சிம்புவுடன் இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன,