தமிழ் சினிமாவில், முன்னணி நடிகையாக ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். நல்ல தரமான படங்களில், சிறந்த கதைகளில் நடிக்க வேண்டும் என்றால், இயக்குநர்களின் முதல் சாய்ஸ் ஆக இருப்பது ஐஸ்வர்யா ராஜேஷ் தான். அட்டக்கத்தி, வட சென்னை, தர்மதுரை, சாமி 2, ஆறாது சினம், காக்கா முட்டை, கனா, நம்ம வீட்டுப்பிள்ளை, ரம்மி, டிரைவர் ஜமுனா போன்ற படங்களில் இவரது நடிப்பு அபாரமாக இருந்தது. ரசிகர்கள் மத்தியில் பலத்த பாராட்டையும் பெற்றது.
இளம் வயதிலேயே தனது சகோதரர்கள் மற்றும் தந்தையை இழந்த ஐஸ்வர்யா ராஜேஷ், பல கட்ட போராட்டங்களுக்கு பிறகே, சினிமா வாய்ப்பை பெற்றார். நல்ல கேரக்டர்களை தேர்வு செய்து நடித்தார்.
இவரது தம்பி மணிகண்டன், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இடம்பெற்ற போது, இவரும் குடும்பத்துடன் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்தது டிரெண்டிங் ஆனது. இப்போதும் தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற்றுவரும் ஐஸ்வர்யா ராஜேஷ், பிஸியான நடிகையாக இருந்து வருகிறார்.
சோஷியல் மீடியாவில் ஆக்டிவ் ஆக இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் அவ்வப்போது தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை அப்டேட் செய்து வருகிறார். படங்களில் கவர்ச்சி காட்டாத நிலையில், இந்த புகைப்படங்களில் கொஞ்சம் ரசிகர்களின் மனங்களை சலனப்படுத்தும் வகையிலான படங்களாக தந்து, ரசிகர்களின் இரவு நேர தூக்கத்தை தொலைத்து விடுகிறார். இந்த புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் பலரும், பெருமூச்சு விட்டபடி, லைக் பட்டன்களை தெறிக்க விடுகின்றனர்.