இன்றைய இளம் நடிகைகளில் ஒருவர் சாக்ஷி அகர்வால். ரஜினிகாந்த் நடித்த காலா மற்றும் விசுவாசம், அரண்மனை 3, சின்ட்ரெல்லா, ராஜாராணி உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார். கன்னட படங்கள் சிலவற்றில் பணி செய்துள்ளார். இவர் சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பு, பன்னாட்டு நிறுவனம் ஒன்றில், வணிக ஆலோசனை மேலாளராக இருந்திருக்கிறார். இவர் ஒரு எம்பிஏ பட்டதாரி என்பது குறிப்பிடத்தக்கது.சினிமாவை காட்டிலும், இவர் அதிகமாக மக்கள் மத்தியில் பிரபலமடைந்தது விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுதான். உடலின் கவர்ச்சியான பாகங்கள், அப்பட்டமாக தெரியும் வகையில், மாடர்ன் டிரஸ்களில் பிக்பாஸ் வீட்டுக்குள் இவர் பவனி வருவதை பார்ப்பதற்கு என்றே, பிக்பாஸ் நிகழ்ச்சியை தினமும் பார்த்த ரசிகர்கள் ஏராளம். அந்த வகையில், ரசிகர்களின் மனங்களை மொத்தமாக கொள்ளையடித்தவர் சாக்ஷி அகர்வால். பெங்களூருவில் மாடலிங் துறையில் இருப்பவர் என்பதால், இவரது ஆடைகளில் எப்போதுமே பேஷன் தான். அதனால், விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற சாக்ஷி, வெகுவாக பார்வையாளர் மனங்களை கவர்ந்தார்.
அழகான, இளமையான தோற்றத்தில் இருந்தாலும், மிக கவர்ச்சியான தோற்றத்தில் இருந்தாலும், சினிமாவில் பெரிய இடத்தை சாக்ஷி பெற முடியவில்லை. என்றாலும், பிக்பாஸ் தந்த பிரபலம் காரணமாக, பொது நிகழ்ச்சிகளில் அதிகளவில் கலந்துகொள்கிறார். விளம்பரங்களில் காணப்படுகிறார். இப்போது, சாரா என்ற புதிய படம் ஒன்றில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார். படத்தின் துவக்க விழா பூஜையில், இசைஞானி இளையராஜா பங்கேற்று குத்துவிளக்கு ஏற்றினார்.இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற சாக்ஷி அகர்வால், சிவப்பு நிற புடவையில், அசத்தலாக காட்சியளித்தார். இந்த புகைப்படங்கள் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இந்த புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள், அடடா.. என்ன அழகு என அசந்து லைக் பட்டன்களை தட்டி வைரலாக்கி வருகின்றனர்.