தமிழ் சினிமாவில் 30 வருடங்களுக்கு முன் அறிமுகமானவர் நடிகை நதியா. பூவே பூச்சூடவா என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இவருக்கு ஆண் ரசிகர்கள் மட்டுமல்லாமல் பெண் ரசிகர்களும் உள்ளனர். ஒரு காலகட்டத்தில் நதியா கொண்டை, நதியா வளையல் மற்றும் நதியா கம்மல் என அவர் பெயரில் வியாபாரமும் செழிப்பாக இருந்தது.

பொதுவாக நடிகைகள் சிலர் இரண்டாவது திரைப்படத்தில் கவர்ச்சியில் குதிப்பார்கள்.ஆனால் தனது இறுதி படம் வரை கவர்ச்சி காட்டாமல் கண்ணியமாக நடித்து ரசிகர்களை கவர்ந்த நடிகை என்றால் அது நதியா மட்டும் தான். இவருக்கு தற்போது 55 வயதாகிறது.

ஆனாலும் தனது இளமை குறையாமல் இன்னும் அப்போது இருந்தது போல இளமையாகவே இருக்கிறார். எப்போதும் இளமையாக நதியாய் இருப்பதற்கான சீக்ரெட் என்னவென்றால், அவர் தினமும் உடற்பயிற்சி செய்வது, யோகா செய்வது மகிழ்ச்சியாக இருப்பது தான் என அவரே பல பேட்டிகளில் கூறியுள்ளார்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
இந்நிலையில் நதியா கடற்கரையோரம் கூலிங் கிளாஸ் அணிந்தபடி எடுத்துள்ள புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் 55 வயதிலும் இப்படி ஒரு இளமையா என வாயை பிளந்து புகைப்படத்தை வைரல் ஆக்கி வருகிறார்கள்.