அம்மாடியோ இவ்வளவா?…. பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க கமல்ஹாசன் வாங்கிய சம்பளம்…. கேட்டா தலையே சுத்துது….!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோகளில் அதிக அளவிலான ரசிகர்களைக் கொண்ட ஒரு நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இதில் இதுவரை 5 சீசன்கள் முடிவடைந்த நிலையில் மிக விரைவில் ஆறாவது சீசன் தொடங்க உள்ளது. அதற்கான ப்ரோமோ சமீபத்தில் ஒளிபரப்பானது. இந்நிலையில் தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் ஆரம்பத்திலிருந்து தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது ஆறாவது சீசனுக்கும் அவர்தான் தொகுப்பாளராக உள்ளார்.

 

இதனிடையே பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் ஜிபி முத்து, ஷில்பா மஞ்சுநாத், ரக்சன், ஜாக்குலின், ராஜலட்சுமி மற்றும் நடிகை கிரண் உள்ளிட்ட பல பிரபலங்களும் போட்டியாளர்களாக பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வருகின்ற அக்டோபர் இரண்டாம் தேதி பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்க உள்ளது. இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியைதொகுத்து வழங்க நடிகர் கமல்ஹாசனுக்கு 75 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாக இணையத்தில் தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த ஐந்து சீசன்களாக கமல்ஹாசன் 55 கோடி சம்பளம் வாங்கி வந்த நிலையில் தற்போது தனது சம்பளத்தை உயர்த்தியுள்ள நிலையில் இந்த முறை இவருக்கு 75 கோடி சம்பளம் வழங்கப்பட உள்ளது. அதுமட்டுமல்லாமல் விக்ரம் திரைப்படத்திற்கு பிறகு கமல்ஹாசன் திரைப்படங்களில் நடிக்க தனது சம்பளத்தை 1330 கோடி வரை உயர்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.