அடையாளமே தெரியாமல் மாறிப் போன ஐ பட நடிகை – என்ன இப்படி ஆயிட்டாங்க

தமிழ் சினிமாவில், அழகிய நடிகைகளுக்கு எப்போதுமே அமோக வரவேற்பு உண்டு. அதனால் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, பஞ்சாப் போன்ற பிற மாநிலங்களை சேர்ந்த நடிகைகள், அதிகளவில் தமிழ் படங்களில் நடிக்கின்றனர். இதற்கு உதாரணமாக சிநேகா, ரோஜா, மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், மீரா ஜாஸ்மின் என பலரை குறிப்பிட்டுச் சொல்லலாம். பொதுவாக, தமிழ் படங்களில் நடிப்பதே, தமிழ் மொழி தெரியாத நடிகைகளாக தான் இருப்பர் என்பது கவனிக்கத்தக்கது.

இதற்கிடையே, தமிழ் படங்கள் சிலவற்றில், வெளிநாடுகளைச் சேர்ந்த ஆங்கில நடிகைகளும் நடிப்பது உண்டு. ஆனால் ஓரிரு படங்களுக்கு பிறகு அவர்கள் பெரிதாக வெற்றி பெற்றது இல்லை. ஆனால், லண்டனை சேர்ந்த நடிகை எமி ஜாக்சன், தமிழில் பல படங்களில் நடித்தார். இயக்குநர் ஏ.எல் விஜய் இயக்கிய மதராச பட்டணம் படம்தான் இவரது முதல் படம். இதில், ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். படம் வெற்றி பெற்றது. தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் சியான் விக்ரம் ஜோடியாக நடித்த ஐ படத்திலும், சிறப்பான கவனத்தை ஈர்த்தார்.

தொடர்ந்து தெறி, 2.0, தங்கமகன் உள்ளிட்ட படங்களில் நடித்த நிலையில், லண்டனை சேர்ந்த தொழில் அதிபருடன், லிவிங் டு கெதர் என்ற முறையில், வாழ்ந்த நிலையில் குழந்தையும் பெற்றுக்கொண்டார். இப்போது அவரை பிரிந்த நிலையில், மீண்டும் எட் வெஸ்ட் விக் என்பவரை காதலிக்கிறார். அவருடன் இருக்கும் டேட்டிங் புகைப்படங்களை வெளியிடுகிறார். இப்போது நடத்திய ஒரு போட்டோ ஷூட்டில் எடுக்கப்பட்ட எமி ஜாக்சன் புகைப்டங்கள் வைரலாகி வருகிறது.

இதில், வித்யாசமான ஒரு கெட்டப்பில் ஹேர்ஸ்டைல், முகமே மாறிய நிலையில், அடையாளமே தெரியாத அளவுக்கு காணப்படுகிறார் எமி ஜாக்சன். ஒருவேளை .பிளாஸ்டிக் சர்ஜரி செய்திருப்பாரோ என அவரது புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.