கன்னக்குழி அழகில், ரசிகர்களை திக்குமுக்காட வைத்த நடிகை சிருஷ்டி டாங்கே… வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்

மும்பையை சேர்ந்த சிருஷ்டி டாங்கே, தனது கன்னக்குழி அழகால் ரசிகர்களை வசீகரித்தவர். தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து, ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையானார். விஜய் டிவியில் ‘குக் வித் கோமாளி’ சீசன் 4ல் இரண்டாமிடம் பெற்றார். இவரது இயற்பெயர் ஸ்ருதி. தமிழ் சினிமாவில்,
துணை கேரக்டர்களில்தான் துவக்கத்தில் நடித்தார். பிறகு, சில படங்களில் நாயகியாக நடித்தார்.

இயக்குநர் மிஷ்கின் இயக்கிய யுத்தம் செய் படத்தில், துணை கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த படம் 2011ல் வெளியானது. இதற்கு முன் தெலுங்கில், ஏப்ரல் பூல் என்ற படத்தில் நடித்திருந்தார். தமிழில், மேகா படத்தில், முக்கிய கேரக்டர் ஏற்று நடித்து, ரசிகர்களின் மனங்களை வெகுவாக கவர்ந்தார்.பிறகு, 2015ம் ஆண்டில், திகில் காட்சிகள் நிறைந்த டார்லிங் படத்தில் நடித்தார். எனக்குள் ஒருவன் காதல் படமாக அமைந்தது.தமிழில் தொடர்ந்து தர்மதுரை, நவரச திலகம், வில் அம்பு, சரவணன் இருக்க பயமேன், ராஜாவுக்கு செக், சக்ரா என பல படங்களில் நடித்தார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவ் ஆக இருக்கும் சிருஷ்டி டாங்கே, அடிக்கடி தனது கிளாமர் புகைப்படங்களை அப்டேட் செய்து வருகிறார். கன்னக்குழி அழகியின் படங்களை பார்த்து அசந்து போகும் ரசிகர்கள் லைக் பட்டன்களை தெறிக்க விடுகின்றனர். கியூட் தோற்றத்தில், தேவதை போன்ற மாடர்ன் ஆடையில் சிருஷ்டியின் அழகான உருவத்தை கண்டு, ரசிகர்கள் அம்மாடியோவ், அம்மணி செம அழகுதான் என, திருஷ்டி கழிக்காத குறையாக, பார்த்து பார்த்து ரசித்து வருகின்றனர், இந்த புகைப்படங்களும் வைரலாகி வருகின்றன.