வதந்தி பரப்புற டீம்,கொஞ்சம் அமைதியா இருங்க – தனது திருமணம் குறித்து நடிகை திரிஷா அதிரடி பதில்

திரிஷா மலையாள திரையுலகை சேர்ந்த தயாரிப்பாளர் ஒருவரை விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக, சமூக வலைதளங்களில் இரு தினங்களாக தகவல் பரவி வருகிறது. ஆனால் திரை நட்சத்திரங்கள் திருமணம் குறித்து அடிக்கடி இதுபோன்ற வதந்தி பரவுவது வழக்கம்தான். இதுவும் ஒரு வதந்தி தான் என்பதை, திரிஷா தனது டிவிட்டர் பக்கத்தில் எச்சரிக்கை பதிவாக செய்துள்ளார்.

அந்த பதிவு இதுதான், dear, you know who you are and your team keep calm and stop rumouring cheers- டியர், நீங்கள் யார் என்று உங்களுக்குத் தெரியும், உங்கள் குழுவினர் அமைதியாக இருங்கள் மற்றும் வதந்திகளைப் பரப்புவதை நிறுத்துங்கள்) என ஆங்கிலத்தில் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். திரிஷாவின் டிவிட்டர் பதிவு, இப்போது வைரலாகி வருகிறது. இதன்மூலம் மலையாள தயாரிப்பாளர் யாரையும் திரிஷா, திருமணம் செய்யப் போவது இல்லை என்பது உறுதியாகி விட்டது.

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்கள் விஜய் அஜீத், விக்ரம், விஜய் சேதுபதி என நடிக்கும் திரிஷாவின் வளர்ச்சி பிடிக்காத சிலர்தான், இந்த வதந்தியை கிளப்பி விட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. திரிஷாவை பொருத்த வரை 40 வயதுகளை கடந்தும் பொன்னியின் செல்வன், 96 போன்ற ஹிட் படங்களில் நடிக்கிறார் விஜய் உடன் நடித்த லியோ படம், அடுத்த மாதம் 19ம் தேதி வெளியாகிறது. அஜீத்குமாரின் விடாமுயற்சி படத்திலும், திரிஷா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதுபோன்ற வேளையில், திரிஷா திருமணம் பற்றி வதந்தி பரவியிருப்பது, சிலரது பொறாமையாக கூட இருக்கலாம் என்கின்றனர் நெட்டிசன்கள்.