இயக்குநர் மிஷ்கின், மிக வித்யாசமான கதைக் களங்களில் படங்களை தருபவர். இவருக்கு என்று தனியாக ரசிகர்கள் உள்ளனர். நடிகராகவும், தன் திறமையை வெளிப்படுத்தி வருகிறார். குறிப்பாக சவரக்கத்தி, நந்தலாலா படங்களை சொல்லலாம். சில மாதங்களுக்கு முன் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் படத்தில், வில்லன் கேரக்டரில் நடித்திருந்தார். விரைவில் வெளிவர உள்ள, லியோ படத்திலும் மிஷ்கின் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2006ம் ஆண்டில் வெளிவந்த சித்திரம் பேசுதடி படம்தான், மிஷ்கின் இயக்கிய முதல் படம். இதில் நரேன்- பாவனா ஜோடியாக நடித்திருந்தனர்.‘ வால மீனுக்கும், விலாங்கு மீனுக்கும் கல்யாணம்’ பாடல், அப்போது செம டிரண்டிங் ஆனது.அதன்பிறகு அஞ்சாதே, யுத்தம் செய், முகமூடி, பிசாசு, துப்பறிவாளன், சைக்கோ உள்ளிட்ட பல படங்கள் அவர் இயக்கி, ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்ற படங்களாக அமைந்தன.
மிஷ்கினை பொருத்த வரை, எதையும் தைரியமாக, அதே வேளையில் சற்று அலட்சியமாக பேசக் கூடியவர். சமீபத்தில், நடிகர் விஜயை ஒருமையில் பேசியதாக பெரும் சர்ச்சை எழுந்தது என்பதும் கவனிக்கத்தக்கது.
அப்படி ஒரு சம்பவம்தான் இது. சில ஆண்டுகளுக்கு முன் கல்லூரி விழா ஒன்றில் மிஷ்கின் பங்கேற்றார். அப்போது, அவர் கவனக்குறைவாக சொன்ன சில வார்த்தைகள் செம வைரலானது. உங்கள் வாழ்க்கையில் நடந்த சந்தோஷம் குறித்து சொல்லுங்கள் என, மிஷ்கினிடம் கல்லூரியில் மாணவர்கள் கேள்வி எழுப்ப, ‘ பாவனாவுடன் இந்த நெருங்கிய உறவு, மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது,’ எனக்கூறி பலரையும் திடுக்கிட வைத்திருக்கிறார். ஆனால், அதில் நட்பை குறிப்பிட்டாரா, காதலை குறிப்பிட்டாரா என்பது இதுவரை தெளிவாக தெரியவில்லை.