மகளின் திடீர் தற்கொலையால் நிலைகுலைந்து போன விஜய் ஆண்டனி; தமிழ் திரையுலகில் தொடரும் சோகம்

தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி. இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன், திமிரு புடிச்சவன், எமன் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். சில மாதங்களுக்கு முன், அவரது நடிப்பில் பிச்சைக்காரன் 2 படம் வெளியானது. இந்த படத்தின் ஷூட்டிங்கின் போது ஏற்பட்ட விபத்தில், முகவாயில் பலத்த காயமடைந்த விஜய் ஆண்டனி பின், குணமடைந்தார்.

இந்நிலையில், சென்னையில் உள்ள விஜய் ஆண்டனியின் வீிட்டில், இன்று அதிகாலை 3 மணிக்கு, விஜய் ஆண்டனியின் மூத்த மகள் மீரா, பேனில் தூக்குப் போட்டு தற்கெலை செய்துகொண்ட சம்பவம், தமிழ் திரையுலகில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 12ம் வகுப்பு படிக்கும் நிலையில், இளம் மாணவியான மீரா, மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொண்டதாக, முதல்கட்ட தகவலில் தெரிய வந்துள்ளது. எனினும் தேனாம்பேட்டை போலீசார், இதுகுறித்து வழக்குப்பதிவு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


‘எனக்கு ஏழு வயதாக இருக்கும்போது, வாங்காத கடனுக்காக என் தந்தை தற்கொலை செய்துகொண்டார்’ என, ஏற்கனவே ஒரு நேர்காணலில் விஜய் ஆண்டனி வருத்தமாக கூறியிருந்த நிலையில், இப்போது அவரது மகளும் இதே முடிவை எடுத்திருப்பது, விஜய் ஆண்டனியை நிலைகுலையச் செய்திருக்கிறது. நடிகர் விஜய் அம்மா ஷோபா, நடிகை குஷ்பு உள்ளிட்ட சினிமா சார்ந்த பலரும், விஜய் ஆண்டனி மற்றும் அவரது குடும்பத்துக்கு நேரில் வந்து ஆறுதல் கூறி வருகின்றனர்.


மீரா துறுதுறுப்பான குறும்புக்கார பெண்ணாக இருந்த நிலையிலும், விளையாட்டிலும் திறமையானவராக இருந்திருக்கிறார். பள்ளியில் சக மாணவிகளிடமும், ஆசிரியைகளிடமும் வெகு சகஜமாக பழகி இருக்கிறார். ஆனால், நேற்றிரவு ஒரு மணியளவில், அலுவலக பணியில் இருந்த விஜய் ஆண்டனி, தண்ணீர் குடிக்க வெளியே வந்த போது, மீராவை பார்த்திருக்கிறார். அப்போது அவர் சற்று பதட்டமாக இருந்ததாக, போலீசார் விசாரித்த போது விஜய் ஆண்டனி கூறியிருக்கிறார். சமீபத்தில், பிரபல நடிகர் மாரிமுத்து திடீர் மறைவு, தமிழ் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த சோக சம்பவம் நடந்துள்ளது.