ரசிகர்களின் தூக்கத்தை கெடுக்கும் தீபிகா படுகோன்; வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

இந்தி, கன்னடம் மொழி படங்களில் மிக பிரபலமான நடிகையாக வலம் வருபவர் தீபிகா படுகோன். இவர் விளம்பர மாடல் அழகி.இவரது தந்தை பிரகாஷ் படுகோன் புகழ்பெற்ற பூப்பந்தாட்டகாரர். டென்மார்க்கில் பிறந்தாலும், தீபிகா படுகோன் வளர்ந்தது பெங்களூருவில். ஏனெனில், அவர் பிறந்த சில ஆண்டுகளிலேயே, அந்த குடும்பம், கர்நாடகா மாநிலத்துக்கு இடம்பெயர்ந்து விட்டது. தீபிகா படுகோன் படித்தது, வளர்ந்தது எல்லாமே பெங்களூருவில்தான்.

தீபிகா படுகோன், 2008ம் ஆண்டில் ஐஸ்வர்யா என்ற கன்னட படத்தில் நடத்தி, சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து 2007்ம் ஆண்டில் ‘ஓம் ஷாந்தி ஓம்’ என்ற இந்தி படத்தில் நடித்து, இந்தியா முழுவதும் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல அறிமுகத்தை பெற்றார். படிக்கும் காலத்திலேயே விளம்பர படங்களில் நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டிய தீபிகா படுகோன் லிரில் சோப், டாபர் லால் பவுடர், குளோஸ் அப், லிம்கா போன்ற விளம்பரங்களில் நடித்து, மக்களின் கவனத்தை ஈர்த்தார். அதன்பிறகே, சினிமா வாய்ப்புகளை பெற்றார். பல பிலிம்பேர் விருதுகளை பெற்றவர்.

சமீபத்தில் வெளியான ‘ஜவான்’ படத்துக்கு முந்தைய படமான, ‘பதான்’ படத்தில் ஷாருக்கான் உடன் தீபிகா படுகோன் படுகவர்ச்சியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தினாலும், படம் செம ஹிட் ஆனது. மாடல் அழகியாக விளம்பர துறையில் இருப்பவர்,

பாலிவுட் நடிகை என்பதாலும், படு கிளாமரான, மாடர்ன் ஆடைகளை அணிந்து, பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். அந்த புகைப்படங்கள் அடிக்கடி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.இந்த புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள், இரவு நேர தூக்கத்தை இழந்து தவிக்கின்றனர்.