வேற லெவல் அப்டேட்…. மீண்டும் ஹாலிவுட் படத்தில் நடிகர் தனுஷ்…. அவரே வெளியிட்ட ஆடியோ கிளிப்….!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இறுதியாக நடித்த மாறன் திரைப்படத்திற்கு பிறகு திருச்சிற்றம்பலம், நானே வருவேன், கேப்டன் மில்லர் உள்ளிட்ட பல படங்களில் நடிப்பதற்கு தனுஷ் கமிட் ஆகி உள்ளார். அதன்படி ஹாலிவுட் இயக்குனர் ரூஸ்சோ பிரதர்ஸ் இயக்கிய தி கிரே மேன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தில் தனுஷ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.படத்தில் சிறிது நேரமே தோன்றினாலும் அவரது கதாபாத்திரம் நல்ல வரவேற்பை பெற்றது. கடந்த 20 வருடங்களாக தனது கடின உழைப்பால் ஆக சிறந்த நடிகராக உயர்ந்திருக்கும் தனுஷ் பாடகர், பாடலாசிரியர்,இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகத் தன்மை கொண்ட கலைஞராக தமிழ் மட்டுமல்லாமல் பிற மொழி சினிமா ரசிகர்களையும் கவர்ந்துள்ளார்.

இந்நிலையில் தி கிரே மேன் 2ஆம் பாகத்தில் தான் நடிக்க உள்ளதை தனுஷ் உறுதி செய்துள்ளார். இது தொடர்பாக படத்தின் நாயகன் சிக்ஸ் இடம் பேசுவது போன்ற ஆடியோ கிளிப் ஒன்றை தனுஷ் பகிர்ந்து உள்ளார். இதையடுத்து தனுஷ் மீண்டும் ஹாலிவுட் படத்தில் நடிக்க இருப்பது உறுதியாகியுள்ளது.