அப்போ மகாலட்சுமி இப்போ திவ்யா…. அடுத்தடுத்து அவிழும் உண்மைகள்…. வசமாக சிக்கும் பிரபல சீரியல் நடிகர்….!!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கி என்ற பகுதியை சேர்ந்த நைனா முகமத் என்பவர் தமிழ் சீரியல் சேனல்களில் நடிகராக நடித்து வருகின்றார். இவரை அர்னவ் என பலரும் அறிந்திருப்போம். இவர் பல சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானதன் மூலம் இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவரைப் போலவே கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சீரியல் நடிகை திவ்யா என்பவர் சென்னை புரசைவாக்கத்தில் தங்கி பல சீரியல்களிலும் நடித்து வருகிறார்.

அதாவது மகராசி மற்றும் கேளடி கண்மணி உள்ளிட்ட பல சீரியல்களில் இவர் நடித்துள்ளார். இதனிடையே கேளடி கண்மணி சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போது நைனா முகமது உடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டு,நாளடைவில் அது காதலாக மாறிய நிலையில் திருமணம் செய்து கொள்ளாமல் இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர். பின்னர் இஸ்லாமிய முறைப்படி இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில் திருமணத்தையும் பதிவு செய்தனர்.

இந்நிலையில் திடீரென மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கும் நடிகை திவ்யா வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் தன்னுடைய காதல் கணவர் தன்னை அழித்து சித்திரவதைப்படுத்துவதாகவும் தங்களின் திருமணம் குறித்த புகைப்படங்கள் மற்றும் சான்றிதழ்களை வெளியிட்டதால் தன்னை தாக்கியதாகவும்,தனக்கு இப்போது பாதுகாப்பு இல்லாத நிலையில் இருப்பதாகவும் தனக்கு நீதி கிடைக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில் தன் மீது கொடுக்கப்பட்ட புகார் குறித்து அர்ணவ், திவ்யா சொல்வது அனைத்துமே பொய். அவர் என்னுடைய குழந்தையை கலைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இப்படி செய்து கொண்டிருக்கிறார். இதற்குப் பின்னால் நடிகர் ஈஸ்வர் தான் இருக்கிறார். எனக்கு உதவி செய்வதாக கூறி எனக்கு கெடுதல் செய்து கொண்டிருக்கிறார்.அவருடன் இணைந்து என் மனைவி கருவை கலைக்க நாடகம் போடுகிறார் என கூறியுள்ளார்.

 

இதற்கு முன்னதாக சீரியல் நடிகையான மகாலட்சுமி பிறந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில், அவரின் திருமணத்திற்கு பிறகு தேவதையை கண்டேன் என்ற சீரியலில் ஹீரோவாக ஈஸ்வரும் வில்லியாக மகாலட்சுமியும் நடித்து வந்தனர்.அந்த சீரியல் மூலம் மகாலட்சுமிக்கும் ஈஸ்வருக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாக ஈஸ்வர் மனைவி ஜெயஸ்ரீ போலீசில் புகார் அளித்த நிலையில் சின்னத்திரை வட்டாரத்தில் இந்த செய்தி பயங்கர பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது ஈஸ்வர் தனது மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வரும் நிலையில் அர்ணவ் மற்றும் திவ்யா விவகாரத்தில் ஈஸ்வரின் பெயர் அடிபட்டு இருப்பது சினிமா வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது .