விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோகளில் அதிக அளவிலான ரசிகர்களைக் கொண்ட ஒரு நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இதில் இதுவரை 5 சீசன்கள் முடிவடைந்த நிலையில் மிக விரைவில் ஆறாவது சீசன் தொடங்க உள்ளது. அதற்கான ப்ரோமோ சமீபத்தில் ஒளிபரப்பானது. இந்நிலையில் தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் ஆரம்பத்திலிருந்து தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது ஆறாவது சீசனுக்கும் அவர்தான் தொகுப்பாளராக உள்ளார்.

இந்நிலையில் வருகின்ற அக்டோபர் ஒன்பதாம் தேதி முதல் தொடங்க உள்ள பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ள போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது இந்த நிகழ்ச்சியில் ஜிபி முத்து, தயாரிப்பாளர் ரவீந்தர், மைனா நந்தினி, பாடகி ராஜலட்சுமி, சீரியல் நடிகை ஆயிஷா, விஜே மகேஸ்வரி, அமுதவாணன், மதுரை முத்து, டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், சீரியல் நடிகை ஸ்ரீநிதி, ஐஸ்வர்யா ராஜேஷ் அண்ணன் மணிகண்டன், மாடல் ஷிரினா, சில்பா மஞ்சுநாத் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியானது.

இதனிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த நிகழ்ச்சி நாளை ஒளிபரப்பாக உள்ளது.இதில் யார் யார் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என ரசிகர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.அவ்வகையில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் 19 போட்டியாளர்கள் குறித்து அதிகாரப்பூர்வ புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது.

