“உடனே கேஸ் போடுங்க”…. நடு ரோட்டில் குக் வித் கோமாளி புகழ் செய்த செயல்…. ஷாக்கான ரசிகர்கள்…..!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர்தான் புகழ். அந்நிகழ்ச்சியில் ஒரு சில நாட்கள் மட்டுமே இருந்து வெளியேறிய இவர் அடுத்ததாக விஜய் டிவியில் ஒளிபரப்பான சிரிப்புடா என்ற நகைச்சுவை நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மிகவும் பிரபலமானார். இருந்தாலும் விஜய் டிவி கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் தான் இவர் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானார்.

அந்த நிகழ்ச்சியில் இவர் செய்யும் காமெடிகளுக்கு அளவே இல்லை. அந்நிகழ்ச்சியை தொடங்க இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. தற்போது சபாபதி, வலிமை, யானை மற்றும் என்ன சொல்லப் போகிறாய் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் சில பட வாய்ப்புகளும் இவர் கைவசம் வைத்துள்ளார். அது மட்டுமல்லாமல் Zoo கீப்பர் எனும் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாகவும் அறிமுகமாக உள்ளார்.

இவர் சமீபத்தில் தனது பல வருட காதலியை பல மத முறைப்படி திருமணம் செய்து கொண்டார். இது தொடர்பாக பல விமர்சனங்களும் இருந்தன. இந்நிலையில் புகழைக்கோட்டும் வீடியோ ஒன்றை இணையத்தில் வைரலாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது. பைக்கில் வேகமாக வரும் புகழ் தனது குல்லாவை கழட்டி விட்டு அதே வேகத்தில் செல்லும் காட்சியை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Vijay Tv Pugazh இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@vijaytvpugazh)

அந்த வீடியோவில் அவர் ஹெல்மெட் அணியாமல் இருப்பது குறித்து நெட்டிசன்கள் பலரும் விமர்சித்து வருகிறார்கள். அதேசமயம் சாலை விதிமுறைகளை மீறிய இவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.