விஜய் டிவியில் பல வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும் புதிய புதிய தலைப்பில் ஒளிபரப்பாகி வருகிறது. பல வருடங்களாக வெற்றிப்பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது இந்த நிகழ்ச்சி. அதற்கு மிகப்பெரிய காரணம் என்னவென்றால் நீயா நானா நிகழ்ச்சியின் ஆங்கர் கோட் கோபிநாத் என்று சொல்லலாம்.

மொத்த நிகழ்ச்சியையும் தனது கட்டுக்குள் வைத்து பிரமிக்க வைக்கும் வகையில் நடத்துவார். நிகழ்ச்சியில் விவாதங்கள் அனைத்தையும் முடித்த பிறகு தனக்கு உரிய பாணியில் பைனல் டச் கொடுப்பார். இந்த நிகழ்ச்சியின் மூலம் தான் இவருக்கு நீயா நானா கோபிநாத் என பெயர் வந்தது. பல வருடங்களாக வெற்றிகரமாக விஜய் டிவியில் இந்த ஷோ ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் விஜய் டிவியில் ஆரம்ப காலத்தில் கோபிநாத் செய்தி வாசிப்பாளராக பணியாற்றியுள்ளார்.அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் அதனை பார்த்து ரசிகர்கள் பலரும் கோபிநாத் செய்தி வாசிப்பாளராக இருந்தாரா என ஆச்சரியத்துடன் கமாண்ட் செய்து புகைப்படத்தை வைரலாக்கி வருகிறார்கள்.
