விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா சீரியல் பல வருடங்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் ஹீரோவாக அருண் பிரசாத் மற்றும் ஹீரோயினியாக வினிஷா தேவி ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்த சீரியல் இன்றும் டாப் லிஸ்டில் இருப்பதற்கு முக்கிய காரணம்பாரதி கண்ணம்மா எப்போது ஒன்று சேர்வார்கள் என்பது தான். தினம் தோறும் ஏதாவது புதிய ட்விஸ்ட் உடன் சீரியல் கதையை நகர்த்திக் கொண்டிருக்கிறது.

இந்த சீரியலுக்கு ஆரம்பத்தில் மவுசு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வந்த நிலையில் தற்போது இதன் மவுசு குறைந்துள்ளது. இதில் ஆரம்பத்திலேயே டி என் ஏ டெஸ்டை அப்போவே எடுத்துட்டு அப்படியே கதையை நகர்த்தி நகர்த்து இருந்தால் கூட இந்த அளவிற்கு சீரியல் இறங்கி போய் இருக்க வாய்ப்பு இல்லை. தற்போது சீரியல் கதை எதை நோக்கி செல்கிறது என்று தெரியாத அளவிற்கு கதையை கொண்டு போய் இருக்கிறார்கள். அது ஒரு பக்கம் இருக்க மறுப்பக்கம் பாரதி கண்ணம்மா சீரியலில் ஒன்று சேர்வார்களா மாட்டார்களா இந்த கதை எப்போதுதான் முடியும் என்று ரசிகர்கள் கொந்தளிக்கும் அளவிற்கு சீரியல் வந்துவிட்டது.

இந்நிலையில் பாரதி கண்ணம்மா சீரியல் குழந்தையின் நட்சத்திரமாக நடித்து வரும் நடிகை லிஷா,அண்மையில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடிகை திரிஷா நடித்திருந்ததைப் போல, லிஷா பச்ச வாசல் அப்படியே குட்டி வயது குந்தவை போடவே வேடமிட்டு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
