“இனிமே நான் இந்தியா பக்கமே வரமாட்டேன்”…. இயக்குனர் செயலால் செம கடுப்பான சமுத்திரக்கனி பட நடிகை….!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை மகிமா நம்பியார். பல ரசிகர்களின் கனவு கன்னியாகவும் தற்போது விளங்கிக் கொண்டிருக்கிறார். கேரளாவை பூர்விகமாக கொண்ட இவர் தனது பதினைந்து வயதிலேயே மலையாளத்தில் வெளியான காரியஸ்தன் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்தார்.

பின்னர் பல விளம்பர படங்களில் நடித்து வந்த இவருக்கு தமிழ் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.அதாவது சமுத்திரகனி நடிப்பில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான சாட்டை திரைப்படத்தில் பள்ளி பருவ பெண்ணாக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். அந்தப் படத்தின் மூலம் நல்ல வரவேற்பை பெற்ற இவருக்கு பல திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

சாட்டை திரைப்படத்தை தொடர்ந்து மொசக்குட்டி, குற்றம் 23,இரவுக்குள் ஆயிரம் கண்கள் மற்றும் கொடிவீரன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் தனது நடிப்பை அசாத்தியமாக நடித்து வெளிப்படுத்தினார். இவர் நடித்த பல திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளனர். தற்போது இவர் சமுத்திரகனியின் கிட்னா என்ற திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் மாறன் இயக்கத்தில் கண்ணை நம்பாதே என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள உள்ளிட்ட பழமொழி திரைப்படங்களிலும் நடித்து வருகின்றார். இந்நிலையில் இயக்குனர் சி எஸ் அமுதன் இயக்கத்தில் உருவாகி வரும் ரத்தம் என்ற திரைப்படத்தில் இவர் நடித்து வரும் நிலையில் அந்தப் படத்தில் ஹீரோவாக விஜய் ஆண்டனி நடிக்கிறார். அப்ப படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜூலை மாதம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது ரத்தம் திரைப்படத்தின் சூட்டிங் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.

இதற்காக படக்குழுவினர் தாய்லாந்து சென்றுள்ள நிலையில் அங்கு சூட்டிங் டிராவலிங் நேரத்தில் நடிகை மஹிமா நம்பி சிறிது நேரம் அசந்து தூங்கியுள்ளார் . அதனைப் பார்த்த இயக்குனர் அமுதன் புகைப்படம் எடுத்து கிண்டல் செய்து பதிவிட்டுள்ளார். இதனைப் பார்த்த மகிமா நம்பி இயக்குனர் பதிவுக்கு, அடக்கடவுளே இது எனக்கு அசிங்கம். இந்தப் பதிவிற்கு பிறகு நான் இந்தியா திரும்ப விரும்பவில்லை என குறிப்பிட்டுள்ளார். அந்தப் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.