பிரபல தமிழ் இசைக் கலைஞர் திடீர் மரணம்….. சோகத்தில் மூழ்கிய திரையுலகம்…. இரங்கல்….!!!!

வில்லிசை பாட்டு கலை நம் தமிழ்நாட்டிற்கு கலைவாணர் என் எஸ் கிருஷ்ணன் அவர்களால் பிரபலமடைந்தது. அவருக்குப் பின்னர் கவிஞர் சுப்பு ஆறுமுகம் அவர்களால் உலக அளவில் வில்லுப்பாட்டுகளை பரவியது. தமிழை தாய் மொழியாக கொண்ட இவரின் குருவித்துவான் கிருஷ்ண பிள்ளை என்பவர். சுப்பு ஆறுமுகம் தனது 16ஆம் வயதில் குமரன் பாட்டு என்ற நூலை எழுதினார். திரைப்பட நடிகர் கலைவாணர் என் எஸ் கிருஷ்ணன் அவர்கள் கவிஞரை வில்லிசை,திரைப்படங்கள் மற்றும் திரைக்கதை எழுத சென்னைக்கு அழைத்து வந்தார்.

இவர் கலைவாணர் அது 19 திரைப்படங்களுக்கும் நடிகர் நாகேஷின் ஏறக்குறைய 60 திரைப்படங்களுக்கும் நகைச்சுவை பகுதிகளை சுப்பு ஆறுமுகம் எழுதி அன்றைய காலகட்டத்தில் திரைப்படங்களில் பங்களிப்பை வெளிப்படுத்தினார். அது மட்டுமல்லாமல் காந்தி கதை,திரும்பி வந்த பாரதி மற்றும் புத்தர் கதை இப்படி ஏராளமான வில்லுப்பாட்டுகளை இசைத்துள்ளார்.

இவரின் இசை பணி காரணமாக வில்லிசை வேந்தர் என போற்றப்படுவது உடன் மத்திய அரசின் சார்பில் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது கடந்த 2021 ஆம் ஆண்டு இவருக்கு வழங்கப்பட்டது. அதனைப் போலவே கடந்த 25ஆம் ஆண்டு மத்திய அரசின் சங்கீத நாடக அகாடமி விருதும் வாங்கினார்.இந்நிலையில் வில்லிசை வேந்தர் சுப்பு ஆறுமுகம் வயது முதிர்வால் ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். இவரின் மறைவுக்கு திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.