இமயமலையில் அஜித்துடன் பைக் ரைடு….. செம கெத்தாக பைக் ஓட்டும் மஞ்சு வாரியார்….. இணையத்தில் போட்ட பதிவு….!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல என்று அனைவராலும் அறியப்படும் நடிகர் அஜித். இவர் நடித்த பெரும்பாலான படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஹிட் கொடுத்துள்ளனர். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவரின் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான வலிமை திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறவில்லை.

இதனைத் தொடர்ந்து எச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ஏகே 61 படத்தில் நடிகர் அஜித் பிஸியாக உள்ளார். இதில் பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். ஹைதராபாத்தில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. படத்தின் பூஜை போடப்பட்டதை தவிர அதன் பிறகு படத்தை குறித்த எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை.இருந்தாலும் படத்தைப் பற்றிய தகவல்கள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி கொண்டு தான் இருக்கின்றன.

படத்தின் சூட்டிங் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற வந்த நிலையில் அதனை முடித்த கையோடு இமயமலைக்கு பைக் ரைட் சென்றுள்ளார் அஜித். அவர் அங்கு இமயமலையை சுற்றி வரும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தினம்தோறும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி கொண்டிருக்கின்றன. தற்போது அஜித்தின் இந்த பைக் ரைடில் பிரபல நடிகை மஞ்சுவாரியாரும் இணைந்துள்ளார்.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Manju Warrier இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@manju.warrier)

அஜித்துடன் இவர் லடாக் பகுதியில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. இதனிடையே அஜித்துடன் மேற்கொண்டு உள்ள இந்த பயணம் குறித்து நடிகை மஞ்சு வாரியார் தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.