மும்பையில் ‘ஆன்டிலா’ வீட்டில் திரண்ட பாலிவுட் நட்சத்திரங்கள்; விக்கி- நயன், அட்லீ உள்ளிட்டோரும் ‘ஆஜர்’

மும்பையில் .உள்ள முகேஷ் அம்பானியின் ‘ஆன்டிலா’ வீட்டில் சமீபத்தில் ஒரு விசேஷ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அரசியல் கட்சி தலைவர்கள், தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள், பாலிவுட் நட்சத்திரங்களும் கலந்து கொண்டு,. விநாயகர் சதுர்த்தி விழாவை, அம்பானி வீட்டில் கொண்டாடி மகிழ்ந்தனர்.

ஷாருக்கான், ஐஸ்வர்யா ராய், மாதுரி தீட்சித், அஜய் தேவ்கன், ரன்வீர் சிங், தீபிகா படுகோன், ஸ்ரத்தா கபூர்,சல்மான் கான், ஆலியாபட், ஜெனிலியா, ரித்தேஷ் தேஷ்முக், கியாரா அத்வானி, சித்தார் மல்கோத்தரா, ஜான் ஆபிரகாம், சுனில் ஷெட்டி, ராஜ்குமார் ராவ், ஜான்வி கபூர், ராஷ்மிகா மந்தனா என, பாலிவுட் நட்சத்திரங்கள் பலரும் கலந்துக்கொண்டனர்.

இவ்விழாவில் கணவன்- மனைவி என தம்பதி சமேதராக பலரும் பங்கேற்றனர். மனைவி, பிள்ளைகளுடன் சில நடிகர்கள் கலந்துக்கொண்டனர். நயன்தாரா – விக்னேஷ் சிவன், அட்லீ – பிரியா ஆகியோரும் இவ்விழாவில் காணப்பட்டனர். உலக பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி இல்ல நிகழ்ச்சிகளில் பங்கேற்பது, சாதாரண விஷயமல்ல என்ற நிலையில், கவுரவ விருந்தினர்களாக இவர்கள் அழைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, அட்லீ இயக்கத்தி ல் ‘ஜவான்’ படத்தில், ஷாருக்கான் ஜோடியாக நடித்தார். இதையடுத்து, பாலிவுட்டிலும் நயன்தாரா, பிரபலமாகி விட்டார். இந்நிலையில், தனது கணவருடன் அம்பானி வீட்டில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட புகைப்படங்கள் செம வைரலாகி வருகிறது. இதில் அட்லீ – பிரியா தம்பதியும் மகிழ்ச்சியாக கலந்துகொண்ட புகைப்படங்களும் பரவி வருகின்றன.