லாஸ்ட்லியாவுடன் பிரேக் அப்… நடுராத்திரியில் பிரபல நடிகையுடன் பைக்கில் சுற்றும் கவின்…. அது யார் தெரியுமா….????

நடிகர் கவின் விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் என்ற சீரியலின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இருந்தாலும் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை தேடி தந்தது சரவணன் மீனாட்சி சீரியல் தான். அந்த சீரியலில் வேட்டையன் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பட்டித் தொட்டி எல்லாம் பிரபலமானார். இன்னும் சொல்லப்போனால் இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது. அதனைத் தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

அந்த நிகழ்ச்சியில் அற்புதமாக விளையாடிய இவர் மற்றொரு பக்கம் லாஸ்ட்லியாவுடன் காதல் கொண்டார்.இவர்களின் காதல் விவகாரம் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பெரும்பாலும் ஒளிபரப்பு செய்யப்பட்டது. ஆனால் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தவுடன் இருவரும் பிரேக் அப் செய்து விட்டதாகவும் கூறப்பட்டது. அதன் பிறகு கவின் சினிமாவில் பிசியாக நடிக்க தொடங்கினார்.

முதல் முதலில் நட்புனா என்னனு தெரியுமா என்ற திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமான இவர் நடித்த அடுத்த படம் லிப்ட் நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் ஆனது. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களுடன் படங்களில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் கவின்,பிரபல நடிகை அபர்ணாதாஸ் உடன் பைக்கில் சுற்றும் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதனைப் பார்த்து ரசிகர்கள் பலரும் லாஸ்ட்லியா பிரேக் அப்புக்கு பிறகு கவின் இப்படி இறங்கிவிட்டாரே என்று யோசிக்க தொடங்கி விட்டனர். ஆனால் அவர்கள் இருவரும் தற்போது தாதா என்ற படத்தில் ஜோடியாக நடித்து வருவதாகவும் திரைப்படத்தின் சூட்டிங் நிறைவு பெற்று விட்டதாகவும், அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் இது எனவும் கூறப்படுகிறது. அந்த புகைப்படங்களும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.