உளவுத்துறை தந்த அதிர்ச்சி ரிப்போர்ட்டால், பயங்கரமாக அப்செட் ஆன விஜய் – அப்போ இசை விழா ரத்தாக ரசிகர்கள்தான் காரணமா?

லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா, வரும் 30ம் தேதி நடக்க இருந்த நிலையில், திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால், அதற்கான காரணங்கள் ஒவ்வொன்றும் ஆச்சரியம், அதிர்ச்சியை அளிப்பதாகவே தொடர்ந்து வந்து கொண்டு இருக்கின்றன.படத்தின் இசையமைப்பாளர் அனிரூத் விழாவில் பங்கேற்க மறுத்ததால் விழா ரத்து என்று சொல்லப்படுகிறது.

சன்டிவியில் மட்டுமே ஒளிபரப்பாக உள்ள இவ்விழாவில், விஜய் அரசியல் பேச பயந்து விழாவை கேன்சல் செய்துவிட்டதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, சென்னை உள்ளிட்ட சில முக்கிய ஏரியாக்களை, திமுக தரப்பில் கேட்டதால், அதை தர படத்தயாரிப்பாளர் தரப்பு மறுத்ததால், அரசியல் அழுத்தங்களால் விழா நடக்கவில்லை என்றும் ஒரு பேச்சு நிலவுகிறது.இந்நிலையில் இந்த விழா நடக்காமல் போனதற்கு விஜய் ரசிகர்களே காரணம். அவர்கள் செய்த சில குளறுபடிகளால்தான், இசை வெளியீட்டு விழாவை விஜயே ரத்து செய்யும் அதிரடி முடிவை எடுத்தார் என்றும் ஒரு தகவல் பரபரப்பாக பரவி வருகிறது. தமிழகம் முழுவதும் உள்ள ரசிகர்களுக்கு அனுப்பிய இசை விழாவுக்கான டிக்கெட்டுகளை பலரும், 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை, மற்றவர்களுக்கு விற்று இருப்பதாக ஏற்கனவே புகார் இருந்தது.இதுமட்டுமின்றி, அந்த டிக்கெட்டுகளை போன்றே பலரும் ஜெராக்ஸ் எடுத்தும், பிரிண்ட் எடுத்தும், பலருக்கும் விற்றுள்ளனர். நேரு இன்டோர் ஸ்டேடியம் 6 ஆயிரம் மட்டுமே கலந்துகொள்ளும் இட வசதி கொண்ட நிலையில், இந்நிகழ்ச்சிக்கு 60 ஆயிரம் பேர் வரை வரும் அளவுக்கு போலி டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளளன.இந்த தகவலை உளவுத்துறை ரிப்போர்ட் ஆக, போலீஸ் கமிஷனர் அலுவலத்தில் இருந்து படத்தின் தயாரிப்பாளர் லலித்குமாருக்கு தெரிவித்துள்ளனர். இந்த தகவலை தயாரிப்பாளரிடம் இருந்து தெரிந்து அதிர்ந்து போன விஜய், அதன்பிறகே விழாவை ரத்து செய்யுமாறு கூறியுள்ளார்.