விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்கலில் மிக முக்கியமான ஒன்று குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி இரண்டு சீசன்களை கடந்து மூன்றாவது சீசன் பைனல் நேற்று நடந்தது. அதில் அனைத்து போட்டியாளர்களும் விதவிதமான உணவுகளை சமைத்தனர்.

இதனைத் தொடர்ந்து முதல் ரன்னர் அப்பாக தர்ஷனும், இரண்டாவது ரன்னர் அப்பாக அம்மு அபிராமியும் தேர்வானார்கள். முதல் ஆளாக, கடைசி சுற்றுக்கு தகுதி பெற்ற ஸ்ருதிகா, தற்போது வெற்றியும் பெற்றுள்ளதை பலரும் பாராட்டி வருகின்றனர்.

குக் வித் கோமாளியின் மூன்றாவது சீசன் டைட்டில் வின்னராக ஸ்ருதிகா வெற்றி பெற்றார். அவருக்கு பலரும் தங்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் குக் வித் கோமாளி சீசன் 3 வெற்றியை கண்ணீர் மல்க மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்ட ஸ்ருதிஹா, அந்த வெற்றியை தனது மகனுடன் கொண்டாடும் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.