இயக்குனர் வினோத்குமார் இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் அண்மையில் உருவாகியுள்ள திரைப்படம் லத்தி சார்ஜ். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இதில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை சுனைனா நடித்துள்ளார். இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவில் விஷால், சுனைனா, உதயநிதி ஸ்டாலின், ரோபோ சங்கர் மற்றும் சூரிய உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

அப்போது மேடையில் விஷால், ரோபோ சங்கர் மற்றும் சூரியா ஆகிய மூவரும் பேசிக்கொண்டிருந்தனர். அதன் பிறகு விஷால் குறித்து ரோபோ சங்கர் பேசிக் கொண்டிருக்கும்போது திடீரென விஷால் கன்னத்தில் அறைந்து விட்டார். அங்கிருந்தவர்கள் அதனை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

அதன் பிறகு சூரி மேடையில் இருந்து சிரித்துக் கொண்டே கீழே ஓடினார். அதனைப் பார்த்த விஷால் சூரியை மீண்டும் மேடைக்கு இழுத்து சூரியையும் அறைந்து விட்டார்.
ஆனால் அதன் பிறகு திடீரென்று மேடையில் மூவரும் சிரித்து பேசி தாங்கள் நடித்ததாக கூறி சூட்டிங் ஸ்பாட்ல நாங்க இப்படித்தான் இருப்போம் என கூறியுள்ளனர்.
