மீண்டும் ஜோடி சேரும் தனுஷ் -ஐஸ்வர்யா…. பழைய நினைவுகளை கொண்டாடும் ரசிகர்கள்…. இணையத்தை கலக்கும் க்யூட் வீடியோ…!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளம் வருபவர் தனுஷ். இவரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் சாதனை படைத்துள்ளது. சினிமாவில் கலக்கி வரும் தனுஷ் நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து பெற்றோர் சம்பந்தத்துடன் கடந்த 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.இருவரும் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வந்த நிலையில் யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.

இதனிடையே சமீபத்தில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தம்பதியினர் இருவரும் விவாகரத்து செய்ய போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டனர். இந்தச் செய்தியை ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.இருந்தாலும் மகன்கள் இருவருமே தனது பெற்றோர்களிடம் அன்பு செலுத்தி வருகின்றனர்.

அவ்வப்போது தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவுடன் தனித்தனியாக இரண்டு மகன்களும் வெளியில் செல்லும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் மீண்டும் சேர்ந்து வாழ போகிறார்கள் என இணையத்தில் செய்தி ஒன்று வைரலாக வருகிறது.ரஜினியின் வீட்டில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் விவாகரத்து ரத்து என செய்திகள் வெளியாக ஆரம்பித்தபிறகு தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் ரொமான்டிக் வீடியோவை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.