குழந்தைக்கு ஆசைப்படும் நடிகை தமன்னா…. திருமணம் எப்போது தெரியுமா?…. அவரே சொன்ன பதில்….!!!!

ஹிந்தியில் நடிகையாக அறிமுகமான தமன்னா தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தமிழில் கேடி என்ற திரைப்படத்தின் மூலம்ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இவர் மிகக் குறுகிய காலத்திலேயே விஜய் மற்றும் அஜித் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தார்.

அது மட்டுமல்லாமல் தனது மெல்லிடையால் ரசிகர்களின் கனவு கண்ணியாக வளம் வந்து கொண்டிருக்கிறார். கடந்த 15 வருடங்களுக்கு மேலாக சினிமாவில் இருக்கும் தமன்னா தற்போது பெரிய ஹீரோ படங்களில் எதுவும் கமிட்டாகவில்லை.கடந்த சில நாட்களாகவே மலையாள படத்தில் தமன்னா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி நிலையில் தற்போது ஹிந்தியில் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.

இதனிடையே ரசிகர்களை கவருவதற்காக தமன்னா தற்போது விழாக்களில் கலந்து கொள்ளும்போது அதிக கிளாமரான உடைகளை போட்டு வருவதால் பலரும் முகம் சுளிக்க வைக்கும் அளவிற்கு அதிக கிளாமரை காட்டுகிறார். இதனிடையே மலையாளத்தில் தற்போது களமிறங்கியுள்ள தமன்னா நடிகர் திலீப் ஜோடியாக ஒரு படத்தில் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார்.

இந்நிலையில் நடிகை தமன்னா அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் தனது திருமணம் பற்றி பேசியுள்ளார்.அதில் 24 மணி நேரமும் படங்களில் நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வருவதாகவும் அதனால் திருமணம் பற்றி யோசிக்க நேரமில்லை எனவும் கூறியுள்ளார். அதற்காக திருமணமே வேண்டாம் என அர்த்தம் இல்லை. விரைவில் கண்டிப்பாக திருமணம் செய்து கொண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்ள ஆசை உள்ளதாகவும் தமன்னா வெளிப்படையாக பேசியுள்ளார்.