தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி என்று அனைவராலும் அறியப்படும் நடிகர் விஜய். இவரின் அனைத்து படங்களும் ரசிகர்கள் மத்தியில் எப்போதும் ஹிட் கொடுக்கும். அவ்வகையில் இவரின் அடைப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் பீஸ்ட். ஆனால் அந்த திரைப்படம் எதிர்பார்த்து அளவிற்கு ஓடவில்லை. இதனைத் தொடர்ந்து தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார் விஜய்.

மிகப்பெரிய எதிர்பார்ப்பை எகிற வைத்து வரும் இந்த திரைப்படம் வருகின்ற 2003 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது. வாரிசு திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா வந்தனா நடித்து வருகிறார்.அது மட்டுமல்லாமல் பிரகாஷ்ராஜ், யோகி பாபு, பிரபு, சரத்குமார், ஜெயசுதா, ஸ்ரீகாந்த் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த திரைப்படத்தில் நடித்து வருகிறது. அதனால் மிகுந்த எதிர்பார்ப்பில் ரசிகர்கள் அனைவரும் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் விஜயின் மகனான ஜாக்சன் சஞ்சய் தற்போது வெளிநாட்டில் சினிமா சார்ந்த பட்டப் படிப்பை படித்து வருகின்றார். இதரிடையே அவர் விரைவில் சினிமாவில் நடிப்பார் என சொல்லப்பட்ட நிலையில் அவரின் தாத்தா சந்திரசேகர் அளித்த பேட்டியில், அவருக்கு இயக்குனர் ஆவதில் தான் விருப்பம் என தெரிவித்துள்ளார். அதேசமயம் சஞ்சய் முதல் படத்தை விஜயை வைத்து இயக்க மாட்டார் என்றும் விஜய் சேதுபதி வைத்து படத்தை இயக்க தான் விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். தற்போது இந்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
