“எப்பா.. கொஞ்சம் கை தட்டுங்கப்பா”…. மேடையில் வடிவுக்கரசி செய்த சுவாரஸ்யம்…. வைரலாகும் வீடியோ….!!!!

தமிழக அரசு ஒவ்வொரு வருடமும் திரைப்பட விருதுகள் அறிவித்து வருகிறது. கடந்த சில வருடங்களாக இது தடைப்பட்டு இருந்த நிலையில் தற்போது மீண்டும் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டன. கடந்த அதிமுக ஆட்சியில் 2009 முதல் 2014 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசு திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டது.

அதன் பிறகு விருது வழங்கும் விழா நடைபெறாமல் இருந்த நிலையில் இந்த வருடம் அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.இதனைத் தொடர்ந்து நேற்று சென்னை களவாணர் அரங்கில் இதற்கான விழா நடைபெற்றது.விருதுக்கு தேர்வானவர்கள் பட்டியல் ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையில் அவர்களுக்கு தமிழக அரசின் திரைப்பட விருதுகள் நேற்று வழங்கப்பட்டன.

அந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சுப்பிரமணியன், சேகர்பாபு, வெள்ளகோவில் சுவாமிநாதன் மற்றும் மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்துகொண்டு விருதுகளை வழங்கி கௌரவித்தனர். இதில் சினிமா நடிகர்கள், சின்னத்திரை கலைஞர்கள், இசையமைப்பாளர்கள் உள்ளிட்ட பலருக்கும் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. அவ்வகையில் நடிகை வடிவுக்கரசிக்கு சின்னத்திரை சீரியல் நடிகைக்கான சிறந்த விருது வழங்கப்பட்டது.

அப்போது அவர் மேடை ஏறும்போது யாரும் கைதட்டாமல் இருந்த நிலையில் கைதட்டுங்கள் என்றே கூறிக் கொண்டே சென்று அமைச்சரிடம் விருது வாங்கிய பிறகு யாரும் கைதட்டவில்லை என்று அமைச்சரிடம் அவர் கம்ப்ளைன்ட் செய்த சம்பவம் மேடையில் சுவாரசியத்தை ஏற்படுத்தியது. அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.