தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை மற்றும் இளைஞர்களின் கனவு கனியான நடிகை நயன்தாரா மற்றும் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் பல வருடங்களாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் மிக பிரம்மாண்டமாக திரை பிரபலங்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.திருமணம் முடித்த கையோடு தாய்லாந்து மற்றும் ஸ்பெயின் நாடுகளுக்கு ஹனிமூன் சென்று அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து ரசிகர்களை குஷி படுத்தினர்.

இந்நிலையில் ஹனிமூன் முடித்துவிட்டு தற்போது இந்தியா திரும்பியுள்ள விக்னேஷ் சிவன் அஜித்தின் அடுத்த படத்திற்கான ஆரம்ப கட்டப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.அதனைப் போலவே நயன்தாராவும் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இதனிடையே திருமணத்திற்கு பிறகு காதல் கணவர் பிறந்த நாளை மாமியார் மற்றும் நாத்தனார் போன்ற குடும்ப உறவினர்களுடன் துபாயில் கொண்டாடினார் நயன்தாரா.

இந்நிலையில் தங்களுக்கு இரட்டைக் குழந்தை பிறந்து இருப்பதாக பதிவிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர். அந்தப் பதிவின் தங்களுக்கு இரட்டைக் குழந்தை பிறந்துள்ளதாக அவர்கள் பதிவிட்டுள்ள நிலையில் அந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.இதனை தொடர்ந்து விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தம்பதியினருக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தம்பதியினர் வாடகத்தாய் மூலமாக குழந்தை பெற்றுள்ளனர். குழந்தைக்காக கலந்த நவம்பர் மாதம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இதற்கான வேலைகளை செய்துள்ளனர். இதனை சினிமா பிரபலம் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
