விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை 5 சீசன்கள் கடந்துள்ள நிலையில் நேற்று மிக பிரம்மாண்டமாக ஆறாவது சீசன் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியை ரசிகர்கள் ஆவலுடன் கண்டுகளித்தனர். இதில் பத்து பெண் போட்டியாளர்கள், 9ஆண் போட்டியாளர்கள் மற்றும் ஒரு திருநங்கை என மொத்தம் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் வார நாட்களில் இரவு 10 மணி முதல் 11 மணி வரையும் வார இறுதி நாட்களில் இரவு 9:30 மணி முதல் இரவு 11 மணி வரையும் ஒளிபரப்பு செய்யப்படும். இந்த நிகழ்ச்சி ஜனவரி 2023 ஆம் ஆண்டு மூன்றாவது வாரத்தில் முடிவடையும். இந்நிலையில் முதல் நாள் நிகழ்ச்சியின் ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது. அதில் ஆரம்பமே யூடியூப் பிரபலம் ஜி பி முத்து அவர்களின் அட்ரா சிட்டி தான்.

இனி வரும் நாட்களில் ஜிபி முத்துவால் பிக் பாஸ் வீடு பரபரப்பாக இருக்கும் என ரசிகர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இதை அடுத்தடுத்து நிகழ்ச்சியில் என்ன நடக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.இந்நிலையில் முதல் நாளே பிக் பாஸ் போட்டியாளர்கள் அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளது. அதாவது குறைவாக கவர்ந்த நான்கு பேர் யார் என எல்லோரும் ஓபன் ஆக சொல்ல வேண்டும் என டாஸ்க் கொடுக்கப்பட்டது.

பலரும் ஆரம்பத்தில் தயங்கினாலும் அதன் பிறகு எல்லோரும் பேச தொடங்கினர். இதில் இறுதியாக நிவாஷினி, விக்ரமன், ஜனனி மற்றும் குயின்சி ஆகிய நான்கு பேர் தான் குறைவாக கவர்ந்த நபர்கள் என சொல்லி நாமினேஷனுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.மேலும் அவர்கள் நான்கு பேரும் இந்த வாரம் முழுக்க வீட்டிற்குள் வரக்கூடாது. அவர்களுக்கு என வெளியில் கொடுக்கப்பட்டு இருக்கும் படுக்கையில் தான் படுத்து தூங்க வேண்டும். சாப்பாடு மற்றும் தூங்குவதற்கு என எதற்காகவும் வீட்டிற்குள் வரக்கூடாது என பிக் பாஸ் அறிவித்துள்ளது.
