பிரபல பாலிவுட் நடிகையான சோனம் கபூர் தற்போது முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் நடித்த பல திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளன. இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் டெல்லியை சேர்ந்த தொழிலதிபர் ஆனந்த் அசுஜாவை கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் ஆண் குழந்தை பிறந்தது.

அதனை சோனம் கபூர் இணையத்தில் பகிர்ந்த நிலையில் குழந்தை பிறந்த இரண்டு மாதத்தில் தனது பணிக்கு திரும்பி விட்டார். தற்போது பிளைன்ட் என்ற திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் சோனம் கபூர் சமீபத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று சர்ச்சையை கிளப்பியுள்ளது.அந்த வீடியோவில் மேக்கப் குழுவுடன் இருக்கும் சோளம் படப்பிடிப்பிற்காக தயாரிப்பது நிலையில் தனது குழந்தைக்கு பாலூட்டிய படி அமர்ந்துள்ளார்.

அந்த வீடியோவை அவர் இணையத்தில் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த பதிவிற்கு அவரின் கணவர் வலிமையான தாய் என கமாண்டு செய்துள்ளார்.அவரின் நண்பர்களும் வாழ்த்து தெரிவித்த நிலையில் நெட்டிசன்கள் பலரும் வேற மாதிரியான ரியாக்சன் கொடுத்து வருகிறார்கள்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
உண்மையான வலிமை தாயைப் பார்ப்பதற்கு நீங்கள் வெளி உலகத்திற்கு வர வேண்டும்,ஏழை தாய்மார்கள் இவரை விட கடினமான உழைப்பாளிகள் என்று கமெண்ட் செய்து வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள்.