பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை தீபிகா படுகோன். இவர் தற்போது ஷாருக்கான் உடன் பதான் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படம் ஜனவரி 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தத் திரைப்படம் ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு என மூன்று மொழிகளில் வெளியாக உள்ளது.
பதவன் திரைப்படத்தை தவிர தீபிகா படுகோனே பைட்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார். அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்தில் ஷாருக்கானுக்கு மனைவியாக நடித்து வருகின்றார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் பெண்களின் முகவெட்டு, கண்கள்,உருவங்கள் மற்றும் உடலமைப்பு என பண்டைய கிரேக்கர்களின் சரியான விகிதாச்சாரத்தின் படி கணிக்கப்பட்டதில் உலகில் மிகவும் அழகான 10 பெண்களில் நடிகை தீபிகா படுகோனே இடம் பிடித்துள்ளார். ஒரு நபரின் தோற்றத்தை மட்டுமே மதிப்பீடும் கோல்டன் ரேஷியோ என்பது அழகை அளவிடும் முயற்சியில் கிரேக்கர்களால் முதலில் வடிவமைக்கப்பட்ட ஒரு கணித சமன்பாடு. அவ்வகையில் தற்போது உலகில் மிகவும் அழகான 10 பெண்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் ஒன்பதாவது இடத்தில் பாலிவுட் திரை உலகின் முன்னணி நடிகையான தீபிகா படுகோன் பிடித்துள்ளார். 91.22% மதிப்பெண்களை இவர் பெற்றுள்ளார். அதே சமயம் இந்த பட்டியலில் இடம் பிடித்த ஒரே இந்தியர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து இவருக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.