அஜித்துடன் நடிக்கும் பிரபல பிக்பாஸ் காதல் ஜோடி…. அதுவும் எந்த படத்தில் தெரியுமா?…. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்….!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல என்று அனைவராலும் அறியப்படும் நடிகர் அஜித். இவர் நடித்த பெரும்பாலான படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஹிட் கொடுத்துள்ளனர். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவரின் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான வலிமை திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறவில்லை. இதனைத் தொடர்ந்து எச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ஏகே 61 படத்தில் நடிகர் அஜித் பிஸியாக உள்ளார்.

இதில் பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். படத்தின் படப்பிடிப்பு அண்மையில் விசாகப்பட்டினத்தில் முடிவடைந்த நிலையில் அஜித் தற்போது காஷ்மீர் மற்றும் லடாக் என வட இந்திய எல்லையில் உள்ள குளிர் பிரதேசங்களில் தனது நண்பர்களுடன் ஜாலியாக பைக் ரைடு செய்து வருகிறார். இவர்களுடன் நடிகை மஞ்சு வாரியாரும் இணைந்துள்ளார்.

தற்போது மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியுள்ள நிலையில் அஜித் பிஸியாக நடித்து வருகிறார்.இறுதி கட்ட படப்பிடிப்பு இந்த மாதம் முடிந்துவிடும் நிலையில் துணிவு திரைப்படத்தை பொங்கலை முன்னிட்டு எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.ஆனால் இந்த திரைப்படம் ஜனவரி மாதம் இறுதியில் வெளியாகும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அமீர் மற்றும் பாவணி இருவரும் தற்போது காதல் ஜோடிகளாக சுற்றிவரும் நிலையில் இவர்களுக்கு அஜித்துடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இவர்கள் இருவரும்,சிபி சக்கரவர்த்தியுடன் சேர்ந்து விமானத்தில் துணிவு திரைப்பட சூட்டிங்ிற்காக செல்லும் புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. எனவே இவர்கள் அஜித்தின் துணிவு படத்தில் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.