“என் முன்னாள் காதலர்கள்”…. முதல்முறையாக சீக்ரெட்டை சொன்ன ராஷ்மிகா மந்தனா…. அதுக்குனு இப்படியா….????

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் இளைஞர்களின் மனதை கவர்ந்தார். இவர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படத்தில் தனது அழகில் ரசிகர்களை சொக்க வைத்திருப்பார். புஷ்பா திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் சாதனை படைத்தது.

அதற்கு முக்கிய காரணம் ராஷ்மிகாவும் தான். அந்தப் படத்தில் தனது நடிப்பை அற்புதமாக அவர் வெளிப்படுத்தி இருப்பார்.இதனைத் தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தில் கதாநாயகியாக இவர் நடித்து வருகிறார்.

இந்த திரைப்படம் வருகின்ற 2023 ஆம் ஆண்டு வெளியாகும் என பட குழு அறிவித்துள்ளது. இதனிடையே ராஷ்மிகா தற்போது இந்தியில் அமிதாப்பச்சனுடன் இணைந்து goodbye என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்த திரைப்படம் அக்டோபர் ஏழாம் தேதி வெளியாகிறது. இந்த திரைப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் ராஷ்மிகா பங்கேற்று வரும் நிலையில் ஒரு நிகழ்ச்சியில் அவரைப் பற்றி வரும் காதல் வதந்திகளுக்கு பதிலளித்துள்ளார்.

அதாவது விஜய் தேவரகொண்டா உடன் காதல் என கிசுகிசுக்கப்பட்டு வரும் செய்து குறித்து பேசிய அவர்,நான் என் முன்னாள் காதலர்களுடன் தற்போதும் பேசி நட்புடன் தான் இருக்கிறேன் என தெரிவித்துள்ளார். அதே சமயம் அவர்களின் குடும்பத்தை சந்திப்பதாகவும் கூறியுள்ளார்.இது நல்ல விஷயமாக இல்லாமல் இருக்கலாம் ஆனால் தனது முன்னாள் காதலர்களின் மனைவியுடனும் அவர் பேசுவதாக கூறப்படுகிறது.