விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மிகப் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக் பாஸ். இதில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களுக்கு ஒரு பக்கம் ரசிகர்கள் இருந்தாலும் அதனை தொகுத்து வழங்கும் கமல்ஹாசனுக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்த நிகழ்ச்சிக்காக மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ள நிலையில் இதுவரை இதில் ஐந்து சீசன்கள் முடிவடைந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி அண்மையில் தொடங்கியது. இதில் ஒன்பது ஆண் போட்டியாளர்கள், 10பெண் போட்டியாளர்கள் மற்றும் ஒரு திருநங்கை என மொத்தம் 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளனர். இதில் முதல் நாளில் இருந்தே பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு பல டாஸ்க்களை கொடுத்து வருகிறது.

இதனிடையே பிக் பாஸ் வீட்டில் தற்போது சென்சேஷனாக இருப்பவர்களில் ஒருவர்தான் விஜே. மகேஸ்வரி.இவர் பிக் பாஸ் வீட்டில் மற்றவர்களுடன் செய்யும் வாக்குவாதம் ரசிகர்கள் மத்தியில் சர்ச்சைக்குரிய ஒன்றாக மாறிவிட்டது.இந்நிலையில் இன்று பிக் பாஸ் வீட்டில் நடைபெற்ற டாஸ்க் ஒன்றில் மகேஸ்வரியின் தலையில் அடிபட்டு காயம். அந்தப் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி ரசிகர்களை பதற வைத்துள்ளது.
