இலங்கை சினிமா துறையில் பிரபல தமிழ் நடிகரான தர்ஷன் தர்மராஜ் இன்று காலமானார். திரைப்படங்களில் சிறப்பாக நடித்ததற்கு பல்வேறு விருதுகளை பெற்றுள்ள இவர் பலராலும் அவதானிக்கப்பட்ட பிரபாகரன், சுனாமி உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட சிங்கிள் மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். சிட்னி சந்திரசேகரன் இயக்கிய ஏ9 என்ற தொலைக்காட்சி நாடகத்தின் மூலமாக நாடகத்துறையில் தனது திரைப் பயணத்தை தொடங்கினார்.

அவரின் முதல் படமான பிரபாகரன் மிகப் பெரிய வெற்றி வாய்ப்பை தேடி தந்த நிலையில் அவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிந்தன.அவர் பிரபாகரன் திரைப்படத்தில் தமிழின விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் கேரக்டரில் நடித்து அசத்தியிருப்பார். அந்தத் திரைப்படத்தை தொடர்ந்து மாதா மற்றும் சுனாமி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்த ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர்.

தனது எதார்த்தமான நடிப்பு திறமையால் சிறந்த நடிகராக பலராலும் பாராட்டப்பட்டவர். இவர் திடீரென மாரடைப்பு காரணமாக உயிரிழந்த சம்பவம் ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இவரின் மறைவிற்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றன.
