அடடே இப்படி ஒரு வாய்ப்பா?…. பிக்பாஸ் தாமரைச்செல்விக்கு அடித்த ஜாக்பாட்…. இது வேற லெவல்…. ரசிகர்கள் வாழ்த்து….!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோகளில் அதிக அளவிலான ரசிகர்களைக் கொண்ட ஒரு நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இதில் இதுவரை 5 சீசன்கள் முடிவடைந்த நிலையில் மிக விரைவில் ஆறாவது சீசன் தொடங்க உள்ளது. அதற்கான ப்ரோமோ சமீபத்தில் ஒளிபரப்பானது. இந்நிலையில் தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் ஆரம்பத்திலிருந்து தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது ஆறாவது சீசனுக்கும் அவர்தான் தொகுப்பாளராக உள்ளார்.

இதனிடையே பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான தெருக்கூத்து கலைஞர் தாமரைச்செல்வி தற்போது திரைப்பட நடிகையாக மாறியுள்ளார். பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி மற்றும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிகளில் பங்கேற்று சிறப்பாக விளையாடிய இவர் தனக்கு ஏகப்பட்ட குடும்ப பிரச்சனை மற்றும் கடன்கள் இருந்தும் பிக் பாஸ் வழங்கிய பணத்தை எடுத்துக் கொண்டு வெளியே செல்லாமல் மற்ற போட்டியாளர்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் விளையாடி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

பிக் பாஸ் விளையாட்டை கில்லி போல் விளையாடினார்.பெரிதாக எந்த ஒரு அவப்பெயரும் இல்லாமல் வெளியே வந்த தாமரைச்செல்வி பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் தன்னுடைய கணவருடன் நடனமாடி ஃபைனல் வரை சென்றார். இந்நிலையில் தாமரைச்செல்விக்கு ஜாக்பாட் வாய்ப்பு ஒன்று தற்போது கிடைத்துள்ளது. அதாவது அவருக்கு தற்போது சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Thamarai Selvi இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@thamaraiselvisarathy_official)

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், திரைப்பட படப்பிடிப்பில் என குறிப்பிட்டு இரண்டு புகைப்படங்களை பகிர்ந்து உள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.