ஜோடி ஜெர்ரி இயக்கத்திலும் சரவணா ஸ்டோர் தொழிலதிபரான அருள் சரவணன் நடித்த தி லெஜண்ட் திரைப்படம் கடந்த ஜூலை 28 ஆம் தேதி உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 2,500 திரையரங்குகளில் வெளியானது. அப்படத்தில் அருள் சரவணன் மனைவியாக கீர்த்திகா திவாரி என்பவர் நடித்திருந்தார். மேலும் அவரின் காதலியாக பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரௌட்டாலா என்பவர் நடித்திருந்தார்.

தமிழ், தெலுங்கு, இந்தி,மலையாள மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் மிகுந்த பொருட்செலவில் மிக பிரம்மாண்டமாக உருவான இந்த திரைப்படம் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 2500 திரையிடங்களில் வெளியிடப்பட்டது. இந்தத் திரைப்படத்திற்கு ஹரிஷ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் வெற்றி படங்களை விநியோகம் செய்த கோபுரம் சினிமாஸ் அன்பு செழியன் இந்த படத்தை அதிக முன் பணம் கொடுத்து தமிழக முழுவதும் வெளியிட்டது. இந்த படத்தைப் பார்த்த ரசிகர்கள் அனைவரும் பலவிதமான கமெண்ட்களை இணையத்தில் தெறிக்க விட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் தி லெஜண்ட் திரைப்படம் 10 நாட்களில் செய்த வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. முதல் நாளே இரண்டு கோடி வசூல் செய்த இந்த திரைப்படம் கடந்த 10 நாட்களில் ரூ.10.5 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.தமிழில் ஒரு அறிமுக ஹீரோ பத்து கோடிக்கும் மேல் வசூல் செய்வது தமிழ் சினிமாவில் பெரிய விஷயமாக பார்க்கப்பட்டாலும் இப்படத்திற்கான செலவுடன் ஒப்பிடுகையில் இது பெரும் நஷ்டம் என கூறப்படுகிறது.