தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் இளைஞர்களின் மனதை கவர்ந்தார். இதனைத் தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.

இவர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படத்தில் தனது அழகில் ரசிகர்களை சொக்க வைத்திருப்பார். புஷ்பா திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் சாதனை படைத்தது. அதற்கு முக்கிய காரணம் ராஷ்மிகாவும் தான்.

அந்தப் படத்தில் தனது நடிப்பை அற்புதமாக அவர் வெளிப்படுத்தி இருப்பார். தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தில் கதாநாயகியாக இவர் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் வருகின்ற 2023 ஆம் ஆண்டு வெளியாகும் என பட குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி என மாஸ் காட்டி வரும் ராஷ்மிகா தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளார். புஷ்பா வெளியீட்டிற்கு முன்பு இரண்டு கோடி வரை சம்பளம் பெற்று வந்த இவர் தற்போது நான்கு கோடி வரை பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் டாப் நடிகையான நயன்தாரா 5 கோடி சம்பளம் பெறும் நிலையில் கொடுத்து வருகிறார்.