தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. முன்னணி ஹீரோவாக வளம் வந்தாலும் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் நடிப்பார். சமீபத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் சாந்தமாகவும், மற்றொரு பக்கம் விக்ரம் படத்தில் மிரட்டும் வில்லனாகவும் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர்.

அது மட்டுமல்லாமல் பேட்ட, மாஸ்டர் மற்றும் விக்ரம் போன்ற படங்களில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து இந்திய அளவில் அனைவரிடமும் கவனத்தை ஈர்த்து வருகிறது. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி என பல மொழிகளில் செம்ம பிசியான நடிகராக விஜய் சேதுபதி வலம் வருகிறார்.

இந்நிலையில் அவர் அடுத்த வில்லனாக நடித்து வரும் மூன்று படங்களின் சம்பள விவரங்கள் குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி புஷ்பா 2 படத்திற்கு 25 கோடி,அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் படத்திற்கு 30 கோடி மற்றும் பாலகிருஷ்ணன் நடிப்பில் உருவாகி வரும் பெயர் வைக்கப்படாத படத்திற்கு 20 கோடி ரூபாய் சம்பளம் என மொத்தம் ஒரே மாதத்தில் மூன்று படங்களில் கமிட் ஆகி 80 கோடிக்கு மேல் சம்பாதித்துள்ளார் விஜய் சேதுபதி. தமிழ் சினிமாவில் ஹீரோக்களின் சம்பளத்தை விட வில்லனாக களமிறகும் விஜய் சேதுபதி தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
